திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்னதிம் திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் செய்திருந்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார். அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் கொறடாவுமான மனோகரன் ஆகியோர் வந்தபோது அதிமுக நிர்வாகி வாழவந்தான் ராஜா என்பவர் வெடி வைத்து உள்ளார்.
அந்த வெடி வெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் அடிபட்டது. இதில் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கண்ணில் ஆபரேசன் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெடி வெடித்தது தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, அதிமுக அமைப்புச் செயலாளரும்முன்னாள் கொறடாவுமான மனோகர் , வெடிவைத்த ராஜா உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் வெடி வைத்த ராஜா, ராகவன், முகமது ரபீக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.