நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. அதிமுக சார்பில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட வி்ரும்புகிறவர்களிடம் வி ருப்ப மனு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விருப்ப மனு வினியோகம் இன்று சென்னை தலைமை கழகத்தில் தொடங்கியது.
விருப்பமனு வாங்க அதிமுக நிர்வாகி்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் விருப்ப மனுக்களை கட்டணம் செலுத்தி பெற்றனர். பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி மாலை 5 மணி வரை மனுக்கள் வழங்கப்படும்.