தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார். இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் சென்னையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக செயல்பட்டபோது, பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்து உடல் உறுப்புகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார். இது அவைரின் பாராட்டையும் பெற்றது.
ஓய்வுபெற்ற டிஜிபியை சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமித்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் எந்த அடிப்படையில் சுனில் குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி உள்ளனர்.