ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்தார்.
தேர்தல் செலவுகுறித்து மேலிடத்தில் இருந்து சாதகமான தகவல் எதுவும் வராததால் கே.வி. ராமலிங்கம் போட்டியிட தயங்குவதாக கூறப்படுகிறது. எனவே அவரது பெயரை தேர்தல் பணிக்குழுவில் சேர்த்து விட்டனர். எடப்பாடி அறிவித்துள்ள 106 பேர் கொண்ட மெகா தேர்தல் பணிக்குழுவில் கே.வி. ராமலிங்கம் பெயரும் இடம் பெற்றுள்ளதால் கே.வி.ராமலிங்கம் வேட்பாளர் இல்லை என்ற தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கட்சி பணம் செலவு செய்தால் நிற்கிறேன் என கறாராக கூறிவிட்டாராம் கே.பி. ராமலிங்கம்.
ராமலிங்கம் இல்லாவிட்டால். 2016ல் ஈரோடு கிழக்கில் வெற்றிபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசுவை வேட்பாளராக்க எடப்பாடி முடிவு செய்து அவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.