Skip to content
Home » ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது….. கோவை அதிமுக வேட்பாளர் கேள்வி

ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது….. கோவை அதிமுக வேட்பாளர் கேள்வி

கோவை மக்களவை தொகுதி  அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார், இது மன வருத்ததிற்குரிய செயல் எனவும், என் தந்தை கோவிந்தராஜன் இறக்கும் போது எனக்கு 11 வயது,
நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம். காரை விற்று கடனை அடைத்தோம் .
பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம், இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர் , இதற்கு அண்ணாமலை கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அண்ணாமலை ஆக்க பூர்வமாக பேச வேண்டும் ,
அவரை தனிப்பட்ட முறையில் நான் எதுவும் பேசவில்லை .
மறைத்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் .
கோவைக்கு திமுக எதுவும் செய்யவில்லை, மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஊழலை பற்றி பேச பா.ஜ.கவிற்கோ, அண்ணாமலைக்கோ,மோடிக்கோ தகுதியில்லை முக்கியமாக அண்ணாமலைக்கு தகுதி இல்லை .
அண்ணாமலை செலவிற்கு எல்லாம் யார் காசு கொடுக்கின்றனர் ?
மோடியின் சாதனை கோவையில் என்ன இருக்கு ?

அண்ணாமலை இந்த ஊர் கிடையாது, அவர் மாநில தலைவர் என்பதால் வெளியே சென்று விடுவார், கோவை மக்களின் பிரச்சினையை யார் பார்ப்பார்கள்?,
கோவையில்
திமுக , அதிமுகவிற்கு மட்டும்தான் போட்டி நடைபெற்று வருகின்றது , இங்கு மட்டும் அல்ல
பா.ஜ.க தமிழகத்தில் எங்கும் இல்லை .
அரசு பதவியில் இருந்தால் மட்டும் திட்டங்களை வாங்கி கொடுப்பாரா? அண்ணாமலை
20 ஆயிரம் புத்தகம் படித்து இருப்பதாக பொய் சொல்கின்றார், புத்தகம் படித்ததாக பொய் சொல்லியதை போல என் தந்தை குறித்தும் பொய் சொல்லி இருக்கின்றார் .
இடத்திற்கு தகுந்தவாறு மாறி கொள்பவர் அண்ணாமலை
களநிலவரம் என்ன என்று தெரியாமல் பேசுகின்றார் அண்ணாமலை.
வாக்கு பெட்டியை பாஜகவினர் மாத்தினாலும் மாத்துவாங்க. அதனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மையத்தின் வாசலில் உட்கார்ந்து இருப்பேன்.
ஓவ்வொரு ஆண்டும் என்ன செய்வேன் என்பதை வெற்றி பெற்றால் நிச்சயம் பட்டியலிட்டு சொல்வேன் , அண்ணாமலை ஜென்டில்மேனாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொல்பவர் அண்ணாமலை,
அண்ணாமலை மச்சான் வைத்திருக்கும் குவாரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது, விசாரித்து பார்த்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *