ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ல் நடக்கிறது. இங்கு கடந்த முறை அதிமுக அணியில் தமாகா போட்டியிட்டது. ஆனால் இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமாகா போட்டியிட வில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சேலத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் தேர்வு குறித்தும், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். நாளை தை அமாவாசையாகும். எனவே நாளை நல்ல நாள் என்பதால், நாளைய தினம் எடப்பாடி அணியின் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.