Skip to content
Home » எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த அடுத்த நாளே மேலும் சில பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது.

இந்த  சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் தீ வைத்து எரித்தனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி முறியுமோ? என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்த சம்பவத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாத காலம் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியானது. நேற்று இரவு பாஜகவில் இருந்து இடைநீக்கப்பட்ட தினேஷ் ரோடி இன்று காலை மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து தற்காலிகமாக விடுவித்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி இன்று அறிக்கை விட்டுள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்று இரவு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இன்று காலை கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிமுகவினருக்கு உச்சகட்ட கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி படத்தை  எரித்தவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ததால், அவரது செயலுக்கு ட்சி தலைமை ஊக்கம் அளிப்பது போல உள்ளது என அதிமுகவினர் கருதுகிறார்கள். இதனால் பா.ஜ.-அதிமுக மோதல் மேலும் அதிரிக்கும் என பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *