தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் பெற்றுதரக்கோரி தஞ்சையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தஞ்சையில் அளித்த பேட்டி:
அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படி மோசமாக இருக்கிறது.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் காவிரி பிரச்னையை மறந்துவிடுகிறோம்.
அதிமுக பாஜக கூட்டணி கூட்டணியிலிருந்து பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் .அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்கள் தான் காரணம். இது நிரந்தரமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன .நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தேமுதிக எடுக்கும்.
தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.
விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் என்பது தற்காலிக தீர்வுதான். அவர்களுக்கு தேவை நிரந்தர தீர்வு. எப்பொழுதுதான் அந்த நிரந்தர தீர்வை நாம் அளிக்கப் போகிறோம் .எத்தனை வருடங்கள் போராட போகிறோம் .இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும். நதிநீர் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நதிகள் இணைப்பு மட்டும் தான் ஒரே தீர்வு. இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கும் போது தேசிய நதிகளை
இணைப்பது மட்டும்தான் இதற்கு நிரந்தர தீர்வு. இதற்கான நடவடிக்கையை பிரதமர் எடுக்க வேண்டும். வருகின்ற தண்ணீரில் சேமிப்பது மாநிலத்தின் கடமை. டெல்டாவில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேர்த்து வைப்பதற்கு நடவடிக்கை இல்லை .ஒரு ஏரி வாய்க்கால் கூட தூர்வார வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.