அரியலூர், அண்ணா சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பார தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு முழுமையாக புறக்கப்பட்டுள்ளது மத்திய அரசு ஆதரவளிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டும் அத்தொகைய தராமல் மத்திய அரசு அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரியும் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு கண்டிக்கத்தக்கது மாணவர்களின் உயிரை பழிவாங்கிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
