மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை இரத்துச் செய்யக் கோரி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலர் பழனிசாமி, பேரூர் செயலர் சின்னையன், ஒன்றியக் கவுன்சிலர் முருகன், கண்ணன், வக்கீல் சரவணன், குருசாமி, கவுன்சிலர் பாலு, கணேசன், பாசறை செந்தில் உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.
