இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார். உடன் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். அன்வர் ராஜா நிரூபர்களிடம் கூறியதாவது…சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். விலகி இருந்தாலும் கட்சியினரின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். என்னை யாரும்
டுக்கவில்லை. கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். இந்தியாவில் காங்கிரசை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன என்று இவ்வாறு தெரிவித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க சொன்னதால் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்த நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.