சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி, சுதாகர் ரேட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்குவதற்கு முன் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது பற்றி தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் பாஜக தலைமை சரியான முடிவை எடுத்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இதுபோல மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறும்போதும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.தமிழக பாஜகவில் அண்ணாமலை தவிர பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே உள்ளனர். இதனால் தான் இன்று அண்ணாமலை இல்லாமல் கூட்டம் நடத்தப்படுகிறது.