முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று அவர் தேனி புறப்பட்டார். அவரை கட்சியினர் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சிகிச்சை முடிந்து வெளியில் வரும்போது, செய்தியாளர்கள் அவரிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் அந்தக் கூட்டணி வெற்றி பெறுமா? என்றும் கேள்வி எழுப்பினர், அதற்கு ஓபிஎஸ் “இன்று விடுமுறை, வந்திருந்த அனைவருக்கும் நன்றி புனித வெள்ளி வாழ்த்துக்கள்” என்று பதிலளித்து விட்டு புறப்பட்டார்.