அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை பெற்று ஈரோடு கிழக்கு வேட்பாளரை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை பெற்று அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், எம்பி சி.வி சண்முகம் ஆகியோர் நேற்று தேர்தல் கமிஷனிடம் வழங்கினர். இதன் அடிப்படையில் நேற்றிரவு தேர்தல் கமிஷன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அலுவலர் சிவக்குமாருக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவின் வேட்பு மனு தாக்கலுக்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திடலாம் என கூறியுள்ளது.. இதனையடுத்து இறுதி நாளான இன்று தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனுவை வாபஸ் பெற 10-ந்தேதி இறுதி நாள் ஆகும். அதற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:ஈரோடு கிழக்கு