சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் அண்ணாமலை நிருபர்களிடம் அண்ணா குறித்து தான் கூறிய கருத்து சரியானது என்றும் , அதற்காக மன்னிப்பு கேக்க முடியாது என்றும் கூறியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். கொச்சி வழியாக டெல்லி சென்றதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து முறையிட திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.