திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்…….. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மகளிருக்கு பாதுகாப்பின்மை, ஆன்லைன் ரம்மி தடையின்மை, போதை பொருள் சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், வரும் 13ம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும், 14ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும், 16ம் தேதி பேரூராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அந்த அறிக்கையில் தொிவித்து உள்ளார்.