உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய நடைமுறைக்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது.