அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாமக எம்.எல்.ஏ க்கள் ஜி.கே. மணி , சேலம் அருள் ஆகியோருடன் பேசிக்கொண்டே வந்தார்.
இதைக்கவனித்த நிருபா்கள், எதைப்பற்றி தீவிரமாக பேசிக்கொண்டு வருகிறீர்கள் என திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அதிமுக, பாமக, பாஜக என நாங்க எல்லாம் கூட்டணிங்க என கூறிவிட்டு சட்டசபைக்குள் சென்றுவிட்டார்.
எப்போது எதாா்த்தமாக பேசும் திண்டுக்கல் சீனிவாசன், பாஜகவுடன் கூட்டணி ஏற்படப்போகிறது என்பதை முன்னதாகவே சொல்லிவிட்டார். ஆனால் எடப்பாடி தேர்தல் வரும்போது தான் கூட்டணி தெரியவரும் என்று இன்னமும் கூறிவருகிறார்.