சினிமா, சின்னத்திரைகளில் வாய்ப்பு தேடி வரும் பல பெண்கள் தங்களை அட்ஜஸ்மெண்ட்டுக்கு அழைத்தனர் என்ற புகார்கள் கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது ஒரு கதாநாயகன் நடிகர், தான் வாய்ப்பு தேடும்போது தன்னை பிரபலமான கதாநாயகி அட்ஜஸ்மெண்ட்டுக்கு அழைத்தார் என்ற கிளுகிளுப்பான பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
அப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்காதா என ஏங்குவோர் பலர் இருக்க, இந்த அறிமுக நாயகன் ச்சீச்சீ எனக்கு அந்த வாய்ப்பே வேண்டாம் என மறுத்து விட்டார். யார் அவர் , யாரின் அழைப்பை அவர் மறுத்தார் என்பதை பார்ப்போம்.
1992ம் ஆண்டு பீதாம்பரி எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். தெலுங்கு, தெரே நாம், டானு வெட்ஸ் மனு பாலிவுட் மற்றும் போஜிபுரி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகரான என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.
ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது என்று கூறியுள்ளார்.
அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம். நக்மாவுக்கும் எனக்கும் காதல் என்று பேசினர். நாங்கள் படங்களில் தொடர்ந்து நடித்ததால் அப்படி கூறினர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகி விட்டது’ என ரவி கிஷன் கூறினார்.