இந்தியா, ஆஸ்திரேலேியா அணிகளுக்கு இடையே அடிலெய்டில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று பகல் இரவுமேட்சாக அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஓட்டக்கரர் ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார் அவருக்கு பதிலாக கில் வந்தார். இப்படியாக மளமளசென விக்கெட்டுகள் சரிந்தன. 10 விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 180 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக நிதிஷ்குமார் ரெட்டி மட்டும் 42 ரன்கள் எடுத்தார்.
அதைத்தொடா்ந்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. கவாஜா, மெட்ஸ்வினி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 13 ரன்கள் எடுத்தபோது பும்ரா பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து கவாஜா அவுட் ஆனார். தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.