தொழில்நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில்முனை திறன் பயிற்சி – துவக்க விழா திருச்சியில் நடந்தது. பெண்கள் விண்வெளி துறைமுதல், பருவநிலை மாற்றம் சார்ந்த தொழில்நுட்ப துறைகள் வரை மேலும்,பல துறைகளில், சமீப காலங்களில் தங்களின் சிறப்பான செயல்திறனை நிரூபித்து சாதனைகளை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் TREC-STEP-ன் இந்த விருது வழங்கும் விழாவானது பெண்களின் உன்னதத் தனி திறமை, செயல்முனைவு, விடாமுயற்சி, தொழில்திறன் ஆகியவற்றை பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த சாதனைகள் மூலம், எடுத்துக்காட்டி வலியுறுத்தி, அதனை கொண்டாடும் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
பெண்களின் தொழில்நுட்பம் சார்ந்த செயல் திறனையும், தொழில் முனைவுகளையும், ஊக்கப்படுத்துவது நம் சமூகத்தில் பெண்களின் சம உரிமையையும், பங்கேற்பையும் நிலைநாட்டி, அதன் மூலம் சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது.
TREC-STEP, இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர், திருமதி. நிஹார் ஷாஜி, திட்ட இயக்குநர், Aditya L1 இந்தியாவின் சூரிய விண்வெளி பயண சிறப்புப்பணியினை தலைமையேற்று செயல்படுத்தி வருகிறார். TREC-STEP அவர்களின் மிக சிறந்த செயல்
திறனையும் விண் வெளி துறையில் செய்த சாதனைகளையும் பாராட்டி, சி. விருதினை வழங்கியது. திருமதி. நிஹார் ஷாஜி அவர்கள் Indian Remote Sensirg, திட்டங்களில் Programme போன்ற ISRO வில் Communication and Interplanetary Satellite மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் துணை திட்ட செயலராக Resourcesat-2A, The Indian Remote Sensing Satellite for National Resource Monitoring & Management துறையில் பல முக்கிய பணிகளை செய்துள்ளார். L1 தற்போது Aditya சூரிய விண்வெளி பயண திட்டத்தின் இயக்குனராக பல பணிகளை விண்வெளி சிறப்பான துறையில் ஆற்றிவருகிறார்.
பசுமை சார்ந்த, பருவ நிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறுகுறு தொழில்முனைவுகளை ஊக்குவிக்கும் விருது வழங்கப்பட்டது.
இதில் 30 பசுமை சார்ந்த, பருவநிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறு குறு தொழில்களை தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு திருமதி. நிஹார் ஷாஜி அவர்கள் விருது வழங்கினார். இந்த 30 தொழில் முனைவோரும் 3
மேலாண்மை மற்றும் தொழில்முனைவு துறை சார் நிபுணத்துவம் உடைய நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் TREC-STEP திறன் பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எம் பி ஜவகர், தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜ ரத்தினம், உதவி பொது மேலாளர் பிந்து பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிஹார் ஷாஜி கூறுகையில்…, ஆதித்யா எல் ஒன், 12 லட்சம் கிலோ மீட்டரை தாண்டி உள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் நிலைநிறுத்தப்படும், அதன் பின்பு முழு சோதனைகள் நடைபெறும். சூரியனை பற்றி நிறைய தகவல்கள் இருக்கிறது. சூரியனிலிருந்து கற்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. நம் பூமி யில் உள்ள புவியீர்ப்பு சக்தியால் பாதுகாக்கப்படுகிறோம்.
முன்பெல்லாம் வானிலை மையம் மழை வரும் எனக் கூறினால் மழை வராது எனக் கூறினோம். தற்பொழுது அந்த நிலை மாறி வானிலை மையம் மழை வரும் என கூறினால் அதே போல் மழை வருகிறது. சூரியனிலிருந்து எப்பொழுது கதிர் வருகிறது என்பது குறித்து ஆராய்வுகள் இல்லை.
சூரியனின் மையப் பகுதியில் இருந்து பெறப்படக்கூடிய ஒலிக்கதிர் மூலமாக நாம் ஒளி பெறுகிறோம். சூரியனின் மையப் பகுதியை விட, சூரியனிலிருந்து வெளிவரக்கூடிய ஒளி கதிரானது அதிகப்படியாக வெப்பத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக சூரியனை நெருங்க முடியவில்லை. இதற்கான சரியான ஆய்வுகள் யாரும் செய்யவில்லை. நாமும் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். சந்திராயன் 3-ல், விக்ரம் லாண்டரில் இருந்த, ரோவர் ஸ்லீப்பிங் மோடில் உள்ளது. அங்கு உள்ள வெப்ப நிலை மைனஸ் 200 டிகிரி. அதன் உள்ளே இருந்த எரிபொருள் உறைந்து இருக்கலாம். ஸ்லீப்பிங் மூடிலிருந்து உயிர்த்தெழுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என கூறினார்.