பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள்… நடிகர் சூர்யா தயாரிப்பு, கார்த்தியுடன் ஜோடி, முத்தையா இயக்கம் என்று காஸ்ட்லி விசிட்டிங் கார்டோடு ‘விருமன்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை அதிதி. அப்படி அறிமுகமான தனக்கு தொடக்கத்தில் இருந்த வரவேற்பு அதன் பிறகு கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இன்னமும் இருக்கிறது.

அதிதி பற்றி கார்த்தியும், சிவகார்த்திகேயனும் பேட்டிகளில் சொன்ன கடி ஜோக்ஸ் எல்லாம் அவரை இன்னும் ஸ்கூல் பொண்ணு அதிதியாகவே இயக்குநர்களை நினைக்க வைக்கிறதாம். தமிழில் ரிலீஸான ரெண்டு படங்களுமே அதிதிக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தாலும், அவை பெரியளவில் பேசப்படவில்லை. இதனால், இயக்குநர்களின் நடிகையாக இல்லாமல், விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் அதிதியை வைத்து வேலை வாங்க முடியாது என்று இயக்குநர்கள் யோசிக்கிறார்களாம். “ஒரு சாயலில், சற்றே உயரமான ப்ரியா மணி கணக்காய் இருக்கிறார் இந்தப் பொண்ணு” என்கிற பேச்சும் கோடம்பாக்கத்தில் எதிரொலிக்கிறதாம்.
தமிழ் சினிமாவில் துறுதுறு கதாபாத்திரங்களில் ரசிகர்களைக் கொள்ளைகொண்ட ரேவதி, குஷ்பு, மீரா ஜாஸ்மின், அசின் போன்ற நடிகைகளுக்கு இன்னமும் ரசிகர்களின் மனதில் இடமிருக்கு. இதை உள்வாங்கி இருக்கும் அதிதி, அது மாதிரியான கதைகளுக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள்.

அதற்கான கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையில், “புது வருஷத்துல டைரி எழுதறேனோ இல்லையோ… என்னுடைய கால்ஷீட் டைரியை நிரப்புறது தான் முதல் டார்கெட்” என்று நட்பு வட்டாரத்தில் சொல்லி வருகிறாராம் அதிதி.
அதிதி நினைப்பது அப்படியே நடக்கட்டும்!