மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், காசியில் ஞானரத யாத்திரையை நிறைவு செய்து நேற்று மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்திற்கு திரும்பினார். வழியெங்கும் பொதுமக்கள்களை ஆதீனகர்த்தருக்கு மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சீர்வரிசை பழதட்டுகளுடன் மலர்தூவி மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தருமபுர ஆதீனம் வருவதை கண்டு தங்கள் போராட்டத்தை மாற்றி முழக்கமிட்டனர். தருமபுர ஆதீனம் ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கட்சியினர் முழக்கமிட்டனர்.
ஒருபக்கம் நகராட்சி நிர்வாகத்தினர் வரிசை பழதட்டுடன் தருமபுர ஆதீனத்திற்கு வரவேற்பு அளித்தனர். நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் ஆதீனம் செல்வதாகத்தில் உள்ளே சென்று ஆதினத்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தின் முழக்கத்தை மாற்றி ஆதீன விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோவின் உண்மைத் தன்மை அறிந்து அதில் உள்ள குற்றவாளிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து குற்றவாளிகளை கைது செய்யகோரி முழக்கமிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.