Skip to content
Home » பணக்காரர்கள் பட்டியல்…..ஒரே வாரத்தில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் அதானி

பணக்காரர்கள் பட்டியல்…..ஒரே வாரத்தில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் அதானி

அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி வருகிறது. இந்தநிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 10-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சொத்து மதிப்பு சரிவால் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வாரத்தில் 3-வது இடத்திலிருந்து 15-வது இடத்துக்கு  அதானி தள்ளப்பட்டார். அதானி குழும பங்குகளின் சரிவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்துள்ளது. இந்த சரிவு மேலும்  தொடரும் என்றும்  பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!