தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்கள் தீவுகள் போல துண்டிக்கப்பட்டு வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இன்னும் அபாயகட்டத்தில் வெள்ளம் பாய்வதால் நிவாரண பொருட்களை அனுப்புவதில் சிரமம் உள்ளது.
ஏற்கனவே 8 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் அதிகமான ஹெலிகாப்டர்களை நிவாரண பணிக்கு அனுப்பி வைக்கும்படி டில்லியில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்து உள்ளார். ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.