திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த முத்து என்பவரது மகன் ரஞ்சித்குமார் ( 26 ). கூலி தொழிலாளி. அண்ணன் வீட்டில் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ரஞ்சித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். ரஞ்சித்குமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.