அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் நகர தலைவர் சுரேஷ் தலைமையில்,மாவட்ட பொது செயலாளர்கள் ப.முத்தமிழ்செல்வன்,ஜெயபால் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் பெரம்பலூர், நான்கு ரோடு பகுதியில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் பிச்சைமுத்து, முருகேசன், அருள் , அருண், தில்லைநாதன் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்க நாற்கரச் சாலை கொண்டுவந்த தங்க மகனுக்கு நான்கு ரோடு மேம்பாலம் பகுதியில் சிலை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோசமிட்டனர்.