தமிழுக்கு அகராதி தந்த வீரமாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சிஅடைக்கல அன்னை திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது .தமிழம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து அடைக்கல அன்னையை தரிசித்து செல்வது வழக்கம்.
இத்தலத்தின் 293வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகளும், கூட்டு திருப்பலிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடைக்கல அன்னையின் அலங்கார தேர்பவனி பங்குத்தந்தை தங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
சமய நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தஞ்சை மாவட்டம் புனல்வாயில் கிராமத்தில் இருந்து இந்து சமய மக்களால் அடைக்கலை மாதா அன்னைக்கு பூக்கள் மலர்மாலைகள் சன்மானமாக அளிக்கப்பட்டது. கிறிஸ்தவ மக்கள் மற்றும் இந்து மக்கள் வழங்கிய பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி,
அடைக்கல மாதா அன்னை பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
அன்னையை வரவேற்கும் வகையில் தேவ தூதர்கள் அடைக்கலமாத அன்னைக்கு மாலையிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து ஏலாக்குறிச்சி பங்குத்தந்தை தலைமையில் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனையடுத்து அடைக்கல மாதா அன்னை தேர்பவனி ஆலயத்தை சுற்றி வந்து ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது. இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, அன்னையின் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.