நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை கடந்த 28ம் தேதி நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று விஜயலட்சுமி வீட்டுக்கு சென்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று நடிகை விஜயலட்சுமியை திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிபதி பவித்ரா முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யபடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.