Skip to content

பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலவேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்தை சீரியல்களில் நடத்தி வருகிறார். இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு வெப் சீரிஸை இயக்கி வந்தார். அந்த வெப் சீரிஸை தொடர கூடாது என பலரும் மிரட்டி வருவதாக அவர் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பெப்சி அலுவலகம் முன்பு நடிக சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது பயோபிக் திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்கை சிலர் எடுத்து வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவு, அதனை வாங்கி தர உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் தன்னிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், அதனையும் வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!