Skip to content
Home » சோளிங்கர் லட்சமி நரசிம்மர் மலை கோவிலில் நடிகை ரோஜா சாமிதரிசனம்….

சோளிங்கர் லட்சமி நரசிம்மர் மலை கோவிலில் நடிகை ரோஜா சாமிதரிசனம்….

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற 1305 படிகள் கொண்ட அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதே போல் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வருகை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்..

இந்த நிலையில் ஆந்திர மாநில YSR காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா மற்றும் அவரது கணவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சோளிங்கருக்கு வந்தனர் அப்போது சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.G.பார்த்திபன் மலையடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக் கோவிலுக்கு

சென்று இருந்தனர் அப்போது கோவிலில் யோக நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயார் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ரோப்கார் மூலம் கீழே இறங்கி வந்த பின்னர் 406 படிகள் கொண்ட சிறிய மலைக்கோயிலுக்கு படிகள் வழியாக நடந்து சென்று யோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே கோவிலுக்கு வந்த நடிகை ரோஜாவுடன் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் என பலரும் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *