புஷ்பா, வாரிசு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. சமீபத்தில் தனது உதவியாளர் சாய் திருமண விழாவில் ராஷ்மிகா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். மணமக்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பிரகாசமான மஞ்சள் நிற புடவை அணிந்து சிரித்தபடி வலம் வந்த ராஷ்மிகா மந்தனா மீதே அனைவரின் பார்வையும் இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.