தமிழ் சினிமாவில் 1960 முதல் 80 வரை புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா(87). 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே பார், ஆலயமணி, வானம்பாடி, ஆண்டவன் கட்டளை, ராஜபார்ட் ரங்கதுரை, எங்கள் தங்கம், ஆயிரம் ஜென்மங்கள், கல்யாண ராமன் என பல படங்களில் நடித்துள்ளார்.
ஏ.வி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி கிறிஸ்தவ மத போதகம் செய்து வந்தனர். இவர்களுக்கு அபிராமி, மகாலட்சுமி ஆகிய மகள்கள் உள்ளனர். சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த புஷ்பலதா, வயது மூப்பு காரணமான நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவர் உடலுக்குத் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பூச்சி எஸ்.முருகன், கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.