லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி.
சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ்,
ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
அவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே, தற்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன், சூர்யா நடிக்கும் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா நான்காம் பாகத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.