நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரான டைரக்டர் விக்னேஷ் சிவன் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். அதன்படி, நேற்று மாலைஇருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன், திருவேங்கட விண்ணவரம் பெருமாள், ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி அங்கு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து சாமிதோப்பில் உள்ளஅய்யா வைகுண்டசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற தம்பதி அங்கு சாமி தரிசனம் செய்தனர்.