சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது டுவிட்டரில்,இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். தற்போது மீண்டும் அதே எலும்பு பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.