சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தரக்குறைவாகவும் அவதூறான கருத்துக்களையும் பேசினார். இது தெலுங்கு பேசும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸ் ஸ்டேசனில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சம்மன் வழங்க கஸ்தூரி வீட்டிற்கு சென்ற நிலையில், நடிகை கஸ்தூரில் வீட்டின் பின்வாசல் வழியாக காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக போலீசார் எந்த நேரமும் தன்னை கைது செய்யலாம் என்பதால் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.