தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது குறித்து தெலுங்கு பேசும் மக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்தனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை என பல ஊர்களில் அவர் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் சென்னையில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று கஸ்தூரி சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் வருத்தம் தொிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.