நடிகை கௌதமிக்கு மலேசியாவின், ஆசிய மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதை தொடர்ந்து பட்டம் பெற்ற கவிதமிக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்து என பல மொழி படங்ககளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌதமி, தமிழில் தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்துடம் ஜோடிபோட்டு ‘குரு சிஷ்யன்’ படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தொடர்ந்து இவர் நம்ம ஊரு நாயகன், ரத்ததானம், வாய் கொழுப்பு, ராஜா சின்ன ரோஜா, எங்க ஊரு மாப்பிள்ளை, பணக்காரன், போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
முன்னணி நடிகையாக இருந்த சமயத்திலேயே சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த இவர்களுக்கு சுப்புலெட்சுமி என்கின்ற மகள் உள்ளார். அந்த சமயத்தில் கருத்துவேறுபாடு காரணமாக இவருக்கும் விவாகரத்து ஆனது. எனவே சென்னை திரும்பிய கௌதமி மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டினார்.
தொடர்ந்த கேன்சரால் பாதிக்கப்பட கௌதமி கமலுடம் லிவ்விங் டூ கெதர் வாழ்கையில் பல வருடம் ஒன்றாக இருந்து சில பல காரணங்களால் பிரிந்தார். தற்போது சில திரைப்படங்களிலும், சமூக சேவை போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வரும் இவருக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.