நடிகை .தமன்னா ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. அதனை அவரும் உறுதி செய்து உள்ளார். தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி உள்ள ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரிஸில் தமன்னா மிகவும் கவர்ச்சியாகவும் படுக்கையறை காட்சிகளிலும் ஆபாசமாக நடித்து உள்ளார்.அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் முத்தமிடக் கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தவர்.தமன்னா எந்த சூழ்நிலையிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று 2016ல் அறிவித்தார். ஆனால் தற்போது தாராளம் காட்டி நடித்து வருகிறார். அமேசான் பிரைம் வீடியோவில் ‘ஜீ கர்தா’ ஒளிபரப்பாகி உள்ளது. இதில் தமன்னாவின் அவதாரத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
பாலிவுட்டில் தமன்னாவின் முதல் வெப் சீரிஸ் ‘ஜீ கர்தா’. இந்த வெப் சீரிஸை அருணிமா சர்மா இயக்கியுள்ளார். இந்த கதை நட்பு, மற்றும் காதல் ஆகியவற்றைச் சுற்றி வருகிறது..ஜீ கர்தா’ ஏழு பால்ய நண்பர்களின் கதை. வயது வந்த பிறகு அவர்கள் சந்திக்கும் சவால்கள்தான் இந்தத் தொடரின் கதை. அவர்கள் யாருக்கும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஆனால் சந்திக்கும் நபர்களுடன் காதல் கொள்கிறார்கள். தமன்னாவுடன் அஷிம் குலாட்டி, சுஹைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், நயன் பானர்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இருப்பினும், இந்த தொடரில் தமன்னா மற்றும் ஆஷிம் குலாட்டி இடையே படுக்கையறை காட்சிகள் உள்ளன. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமன்னாவை டிரோல் செய்து வருகின்றனர். முத்தம் கூட கொடுக்காத தாங்களா எப்படி இவ்வளவு துணிச்சலான காரியம் செய்ய முடிகிறது என்று கேட்கிறார்கள். படுக்கையறை காட்சியில் தமன்னாவின் முகபாவனைகள் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் சிலர் வேடிக்கையான மீம்களை உருவாக்குகிறார்கள்.