பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆண்ட்ரியா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது எனக்கு 11 வயது இருக்கும். நான் என் பெற்றோருடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஜீன்ஸ்,டீ ஷர்ட் அணிந்திருந்தேன். என் அப்பா அருகில் அமர்ந்திருந்தார். அப்போது என் டீ-ஷர்டுக்குள் மர்ம நபர் ஒருவர் கை விடுவதை உணர்ந்தேன். பின்னர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அப்பா பக்கத்தில் பயத்துடன் அமர்ந்து கொண்டேன். இதை யாரிடமும் சொல்லாததற்கு என்ன காரணம் என அப்போது எனக்கு புரியவில்லை அழுகைதான் வந்தது .என தெரிவித்துள்ளார்.