கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரையில் 2 பெண்கள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கள்ளசாராய உயிரிழப்பிற்கு தமிழக அரசின் மெத்தனமே காரணம் என விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று மாலை நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தபெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.