Skip to content
Home » பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் நடிகர் விஜய்

பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார் நடிகர் விஜய்

  • by Authour
 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க  அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அந்த பகுதி  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  போராட்டக்குழுவினரை எதிர்க்கட்சிகள் அவ்வப்போது சந்திதது ஆதரவு  அளித்து  வருகிறார்கள்.
இந்த நிலையில்  தவெக தலைவர் நடிகர் விஜயும் போராட்ட குழுவினரை சந்திக்க உள்ளார்.  வரும் 19 அல்லது 20ம் தேதி போராட்டக்குழுவினரை   விஜய்  சந்திக்க முடிவு செய்துள்ளார்.
விஜய் அங்கு செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என  காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு கொடுக்க  தவெக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.