நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சித் தொடங்க முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். நடிகர் விஜய் பணிகளை கவனிக்க சென்னையில் ஒரு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மேலாளராக இருப்பவர் ராஜேஷ். திருமணமானவர். இவர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த ஒரு இளம்பெண்ணிடம், ஆசை வார்த்தை கூறி பழகி உள்ளார். உனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருகிறேன் என கூறி அந்த பெண்ணிடம் பாலியல் சேட்டைகள் புரிந்து உள்ளார். அதற்கு கூலியாக ரூ.10 லட்சம் வரை வாங்கியும் இருக்கிறார்.
முதலில் அந்த அந்த பெண் உடன்பட மறுத்துள்ளார். உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி நெருக்கமாகி விட்டார். சில மாதங்கள் சென்ற பிறகு தான் சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்காது என தெரிந்தது. திருமணமாவது செய்து கொள்ளுங்கள் என கூறி உள்ளார். அதற்கு அவர் எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து சென்னை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை தேைவைந்தனர். பரங்கிமலையில் பதுங்கி இருந்த அவர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் இதுபோல இன்னும் எத்தனை பெண்களிடம் பாலியல் டார்ச்சர் செய்துள்ளார் என போலீசார் விசாரிக்கிறார்கள்.