நடிகர் விஜய் கடந்த 22ம் தேதி தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதை அறிந்த நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தனது லட்டர்பேடில் கைப்பட கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புடையீர் வணக்கம்,
கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக, நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.
பிரியமுடன்
விஜய்
இவ்வாறு அதில் கூறி உள்ளார். இந்த கடிதத்தை சென்னையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சரவணன் என்பவர் சமூகவலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். ஆனால் லட்டர்பேடின் மேல் பகுதியில் ஜோசப் விஜய் என இருக்கும். அந்த பகுதியை மறைத்து லட்டர் வெளியிடப்பட்டு உள்ளது. ஜோசப் விஜய் என்பதை சரவணன் மறைத்தாரா, அல்லது விஜய் அதனை மறைத்து கடிதம் எழுதி உள்ளாரா, ஜோசப் ஏன் மறைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வழக்கம் போல விஜய் என கையெழுத்து போட்டு உள்ளார்.