Skip to content

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

  • by Authour

நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறது.

தவெக பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிகிறது.  அதைத் தொடர்ந்து  மார்ச் முதல் வாரத்தில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர்  மத்திய அரசின்  சார்பில் ஒய்  பிரிவு  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  மத்திய உள்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவு பாதுகாப்பில்,  சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர்  இருப்பார்கள்.    விஜய்க்கு தமிழ்நாட்டில்  மட்டும் இவர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

 

error: Content is protected !!