நடிகர்வடிவேலு இன்று மதியம் சென்னை சாலிகிராமம் காவிரி நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் வாக்களிக்க வராமல் இருக்கிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிந்தித்து ஓட்டுப்போடுகிறார்கள். ஒரு தடவைக்கு 10 தடவை சிந்தித்து வாக்களிக்கிறார்கள். இளைய தலைமுறையினர் எல்லாம் தெரிந்திருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டு தான் பெற்றோர்களே ஓட்டு போடுகிறார்கள். உள்ளங்கை அளவுக்கு உலகம் சுருங்கி விட்டது.இந்த முறை சூட்டிங் பிசியாக இருந்ததால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவில்லை. இந்திய குடிமகனாக எல்லோரும் ஓட்டு போடணும், (இவ்வாறு கூறிய அவர் பாரத விலாஸ் படத்தில் வரும் இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என்பேரு என்ற பாடலை பாடினார்)
சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறது என கேட்டபோது, அதை பத்திரிகையாளர்கள் தான் கேட்டு சொல்லணும் என்றார். அநேகமாக இந்த தேர்தல் முடிந்ததும் நல்ல மழை வரும். மக்கள் ஆரோக்கியமாக , சவுக்கியமாக இருக்கணும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை காப்பாத்தணும், மக்கள் கண்ணீர் சிந்தாம இருக்க நடவடிக்கணும்.
இவ்வாறு அவர் கூறினார்.