Skip to content

நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை 6 மணி அளவில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் காலமானார். கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொண்டு ஓய்வில் இருந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்த மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் மனோஜ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!