Skip to content

”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ’கண்ணாடி பூவே’  மற்றும் கனிமா பாடகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரெட்ரோ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சூர்யா நிறைவு செய்துள்ளார்.

error: Content is protected !!