தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார் (வயது 82). கதாநாயகன், குணச்சித்திரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-ம் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானார். டிவி தொடரிலும் நடித்துள்ளார்.
தற்போது நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். சில நேரங்களில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்படி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. ரசிகர்கள் வந்து செல்பி எடுக்க முயன்றால் செல்போனை தட்டி விடுவது இவரது வழக்கமாக இருக்கிறது. ஒருமுறை இப்படி செல்போனை தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. பின்னர் தனது செலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய “இப்படித்தான் உருவானேன்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார் நூலாசிரியர் பழ. கருப்பையா காலைத் தொட்டு கும்பிட்டார். பொதுவாக வயதில் மூத்தவர்களைத்தான் காலைத் தொட்டு வணங்குவது வழக்கம்.
ஆனால் சிவக்குமார் தன்னை விட வயதில் சிறியவரான பழ.கருப்பையாவின் காலைத்தொட்டு கும்பிட்டதை பார்த்த மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். விழா முடிந்து செல்லும்போது ஒரு முதியவர் சிவக்குமாருக்கு பொன்னாடை கொடுத்தார். அவா் ஆசையாய் கொடுத்த பொன்னாடையை வாங்கி் வீசி எறிந்தார் சிவக்குமார்.
இதையும் கவனித்த பொதுமக்கள் சிவக்குமாருக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி செய்கிறார், என்று கோபத்துடன் பேசிக்கொண்டனர். சால்வை வீச்சு சம்பவமும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி அந்த விழாவில் பங்கேற்றவர்கள் இனி, சிவக்குமார் பக்கத்தில் யாரும் நெருங்க மாட்டார்கள் என தங்கள் வருத்தத்தையும் பதிவு செய்தனர்.
4